கொல்கத்தாவில் ஒரு தெரு வியாபாரி நேர்மையான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது. ஒரு வெளிநாட்டு பயண வ்லாகர், 20 ரூபாய்க்கு பனானா ஷேக் விற்றுக்கொண்டிருந்த அந்த வியாபாரியிடம் சென்றார். அவர் 30 ரூபாய் கொடுத்து, மீதி தொகையை டிப்ஸாக வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.
ஆனால், அந்த வியாபாரி நேர்மையுடன் கூடுதல் பணத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்த இதயத்தைத் தொடும் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி, இன்ஸ்டாகிராமில் 2.6 கோடிக்கும் மேல் பார்வைகளைப் பெற்று, உலகம் முழுவதும் இந்தியாவின் நேர்மையைப் பறைசாற்றுகிறது.
View this post on Instagram
பொதுவாக, வெளிநாட்டவர்களைக் கண்டால் சில வியாபாரிகள் விலையை உயர்த்துவது வழக்கம். ஆனால், இந்த கொல்கத்தா வியாபாரி தனது நேர்மையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வீடியோவில், வெளிநாட்டவர் ஒரு பெரிய பச்சை வாளியை சுட்டிக்காட்டி, “இவர் இதில் என்ன விற்கிறார்?” என ஆர்வத்துடன் கேட்கிறார்.
பனானா ஷேக் என்று தெரிந்ததும், ஒரு கிளாஸ் ஆர்டர் செய்கிறார். வியாபாரி 20 ரூபாய் என்று கூற, அவர் 30 ரூபாய் கொடுத்து டிப்ஸாக வைத்துக்கொள்ளச் சொன்னார். ஆனால், வியாபாரி “பணம் வேண்டாம்” என மறுத்தது அவரது இதயத்தை வென்றது. “இதுதான் இந்தியா, இங்கு நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்கள்!” என்று வெளிநாட்டவர் பாராட்ட, பயனர்கள் “இதுதான் இந்தியாவின் உண்மையான அழகு” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
