தமிழக வெற்றி கழகத்தின் தற்போதைய அமைச்சரவையிலும் கூட்டணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களின் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கையாள்வதில் காவல்துறை சந்தித்து வரும் இக்கட்டான சூழல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கடுமையான சட்டம் ஒழுங்கு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தவெக கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அமைச்சரவையில் அங்கம் வகிப்பதாலும், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்கு ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டாலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அரசியல் அழுத்தங்களின் வெளிப்பாடுதான் அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற சம்பவத்திற்குக் காரணம் என்று காவல்துறைக் தரப்பினர் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். கூட்டணி மற்றும் அமைச்சரவை தர்மம் காரணமாகச் சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியாத இந்தச் சூழலை ஆரம்ப கட்டத்திலேயே முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலையிட்டுச் சரி செய்ய வேண்டும். இல்லையெனில், இது வரும் காலங்களில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கலையப் பெரிய அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று மூத்த காவல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

“>

 

கூட்டணிக் கட்சிகளைக் கையாள்வதிலும், மாநிலத்தின் சட்டம் ஒழுக்கைக் காப்பதிலும் முதல்வர் விஜய் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.