தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

சட்டமன்றத்தின் நேரத்தை மிச்சப்படுத்தவும், விவாதங்களை முன்னெடுக்கவும் அவர் காட்டும் கண்டிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், அதற்கு எதிர்வினைகளும் வந்து கொண்டுள்ளன.

இன்றைய சட்டமன்ற அமர்வின்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் அமைச்சர் சரத் பேசுகையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் குறிக்கிட்டதைச் சுட்டிக் காட்டி அவர் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறுவது தவறானது. மக்கள் பிரச்சினைகளைத் தொகுதியில் எழுப்ப வேண்டிய நேரத்தைக் கட்டுக்குள் வைத்து, சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை விவேகமாகப் பயன்படுத்தவே அவர் முயல்கிறார். அவையில் தேவையின்றி முதல்வர் விஜய்யை நோக்கித் தொடர்ச்சியாகத் துதி பாடும் நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு, பொதுமக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்துள்ளது.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் பேசுவதைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அமைச்சர் சரத் சபாநாயகரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், ஒரு சாதாரண நபர் பேசுவது போலக் கையை உயர்த்திப் பதிலளித்த விதம் அவைக்குரிய மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

“>

 

கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களைப்போல இல்லாமல், சபாநாயகர் நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்ற தவெக தலைமையின் கொள்கைக்கு ஏற்ப ஜே.சி.டி. பிரபாகரன் தனது கடமையைச் செய்து வருகிறார். நேரத்தை மிச்சப்படுத்திப் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை விவாதிக்க இந்த நடுநிலைத்தன்மை பெரிதும் உதவும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.