சாம்சங் நிறுவனம் தனது புதிய S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத ஒரு ரகசிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நாம் மொபைலை பயன்படுத்தும் போது அருகில் இருப்பவர்கள் ஸ்கிரீனை எட்டிப் பார்க்க முடியாதபடி, பிரத்யேக ‘பிரைவசி டிஸ்பிளே’ தொழில்நுட்பத்தை இந்த மாடல்களில் சாம்சங் கொண்டு வந்துள்ளது.
சாம்சங் S சீரிஸ் பிரியர்களிடையே இந்த புதிய அம்சம் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் இந்த அட்டகாசமான போன்கள் ₹87,999 முதல் ₹1,39,999 வரையிலான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை இனி எவர் கண்ணிலும் படாமல் பாதுகாக்க இந்த புதிய சாம்சங் S26 ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
