ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு நேரும் சங்கடங்களைச் சகித்துக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு ஜோடியின் அநாகரிகச் செயலால் ஒட்டுமொத்தப் பெட்டியே ஸ்தம்பித்த சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

சம்பவத்தன்று, ரயிலில் பயணம் செய்த ஒரு வாலிபரும் பெண்ணும் நீண்ட நேரமாக கழிவறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு வெளியே வரவில்லை. சுமார் 2 மணிநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவசரத் தேவைக்காகக் காத்திருந்த பயணிகள் பொறுமையிழந்து கதவைத் தட்டியுள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த ஜோடி வெளியே வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவர்களைக் கண்டித்தனர். ஆனால், அந்தப் பெண் சற்றும் பயமோ தயக்கமோ இன்றி, “நான் எதைச் செய்தாலும் அது என் இஷ்டம்; என் விருப்பம்,” என எகிறியுள்ளார்.

மேலும், “வீடியோ வைரலானால் எனக்கு என்ன ஆகப்போகிறது?” என அலட்சியமாகப் பேசியது பயணிகளை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் ரயில்வே அமைச்சகத்திற்குப் புகார்களைத் தட்டி வருகின்றனர்.