டிராபிக் ஜாமிற்குப் பெயர்பெற்ற பெங்களூருவில், இப்போது ஒரு வினோத சண்டை வீடியோ இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்தை (TNSTC), ஒரு பெண் தனது ஸ்கூட்டியைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான வீடியோவில், அந்தப் பெண் பேருந்து டிரைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவருக்குத் துணையாக அவரது இரண்டு சிறு குழந்தைகளும் டிரைவரைப் பார்த்து, “தைரியம் இருந்தா எங்களைத் தொட்டுப் பாருடா” என்று சினிமா பாணியில் சவால் விடுகின்றனர்.

இடையில் ஒரு நபர் வந்து பேருந்தின் மீது ஓங்கி அடித்துத் தனது ஆத்திரத்தைக் காட்டுகிறார். எதற்காக இந்தச் சண்டை தொடங்கியது என்று தெரியவில்லை என்றாலும், நடுரோட்டில் பேருந்தை மறித்துப் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கிய அந்தப் பெண்ணின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

“பெற்றோர்கள் செய்யும் தவறான காரியங்களைக் குழந்தைகளும் அப்படியே பின்பற்றுகின்றனர்; இது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல” என நெட்டிசன்கள் பலரும் தங்களது கவலைகளைப் பதிவிட்டு வருகின்றனர்.