உத்தர பிரதேச மாநிலம் ஏட்டாவைச் சேர்ந்த கமல் சிங் என்பவர், தனது மகள் ஜோதியின் திருமணத்திற்காகப் பணத்தைத் திரட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த பண நெருக்கடியால் ஏற்பட்ட விரக்தியில், தனது குடும்பத்தினரைக் கொலை செய்ய அவர் துணிந்துள்ளார்.

வீட்டில் இருந்த செங்கலால் தனது தந்தை கங்கா சிங், தாய் ஷியமா தேவி, மனைவி ரத்னா தேவி மற்றும் மகள் ஜோதி ஆகியோரை அவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.இந்த பயங்கர தாக்குதலில் கமல் சிங்கின் பெற்றோர் மற்றும் மகள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். தனது குடும்பத்தினர் நான்கு பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு கமல் சிங் போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.