சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் எருமையிடம் பாலைக் கறந்து, அருகில் ஆவலுடன் காத்திருந்த பூனைகளுக்குக் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஒரு கொட்டகையில் எருமையின் பாலை வெள்ளைக் குவளை ஒன்றில் அவர் கறக்கிறார். அப்போது, அருகில் ஐந்து பூனைகள் ஆசையுடன் பாலை எதிர்பார்த்து அமர்ந்திருந்தன.
பூனைகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, அந்த நபர் இரண்டு கிண்ணங்களில் சிறிதளவு பாலை ஊற்றி, உடனடியாக அவற்றைக் குடிக்கக் கொடுத்தார்.
इंसान पैसे से ज्यादा
दिल से अमीर होना चाहिए। ❤️
दिल खुश कर दिया भाई ने। 😍👏 pic.twitter.com/GmxdVtJvTt— Memezy (@_memezy_) December 14, 2025
இந்த அரிய காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “பணத்தால் பணக்காரன் ஆவது வேறு; ஆனால், இதயத்தால் பணக்காரன் ஆவது தான் உண்மையான விஷயம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் செயலால் மனிதாபிமானமும், விலங்குகளிடம் உள்ள பாசமும் அழகாக வெளிப்படுகிறது என்று கூறிப் பலரும் அந்த நபரைப் பாராட்டி வருகின்றனர்.
