ஒரு குடும்பத்தில் மூன்றாவது முறையாகப் பெண் குழந்தை பிறந்ததை மருத்துவர் தெரிவித்தபோது, அங்கு இருந்த ஓர் உறவுக்காரப் பெண் முகத்தைச் சுளித்து, வருத்தம் அடைந்தக் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம், இன்றும் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பாலினப் பாகுபாடு மற்றும் பெண் குழந்தையின் பிறப்பைச் சுமை எனக் கருதும் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

https://www.facebook.com/watch/?v=1721505745472467&t=26

உறவினரின் இந்த எதிர்வினை ஏற்கெனவேப் பலரை வருத்தமடையச் செய்த நிலையில், மருத்துவர் அந்த குடும்பத்தைத் தேற்றுவதற்காக, “இப்போது என்ன செய்வது?” என்ற தொனியில் பேசியது மக்கள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

உறுதியான பதிலைக் கொடுக்க வேண்டிய மருத்துவ நிபுணரே, அந்தக் குடும்பத்தின் ஏமாற்றத்தை சாதாரணமாக அங்கீகரித்தது, பழமையானச் சிந்தனையை மேலும் பலப்படுத்துவது போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

“அக்குழந்தை எந்த மனநிலையில் வளரப்போகிறது என்பதே உண்மையான சோகம்” என்று பலரும் கோபமாகக் கருத்துத் தெரிவித்து, சமூகத்தில் உள்ள இந்த பாலினப் பாகுபாட்டிற்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.