செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,   நடிகர் சங்கம் எவ்வளவு பெரிய அமைப்பு…. எம்.ஜி.ஆர் தலைமை வகித்த…  சிவாஜி தலைமை வகித்த… மிக பெரிய அமைப்பில் உட்கார்ந்து இருக்கீங்க. அந்த கட்டிடத்தை கட்ட கடன்  வாங்குக்குறேன்னு சொல்லி இருக்கீங்க….. அது எல்லாம் நான் அடுத்த கட்டத்திற்கு வருகின்றேன்… நான் நடிகர் சங்கத்தை விமர்சிக்கவில்லை,  இது எதிர்வினை.. அவர்கள் செய்த தப்பை உணர்ந்து… முறைப்படி கேட்க வேண்டும்… அவுங்க அவுங்க  இடத்தில் வையுங்கள்….  எனக்காக மக்கள் பேசுவார்கள்…  பேட்டி ஆரம்பத்தில் சொன்னேன்…..

முதலில் நான்தான் வழக்கு போட வேண்டும்… ஏனென்றால் இவ்வளவு அவமானப்படுத்தி…. எல்லா சேனலையும்  வரவைத்து…. நான் பேசியது தவறு என்று எப்படி நான் சொல்ல முடியும்.  நான் தப்பா பேசவே இல்லையே…. விடிய விடிய  ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன், சித்தப்பா என சொல்லுறீங்களே… சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன ? இது தேவையில்லாத சர்ச்சை….  வைரமுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதற்காக பேசினேன்…

மகிழ்ச்சியாக பேசி வைப்போம் என்று பேச வந்தேன்….  நான் ஆஞ்சநேயர் மாதிரி தூக்கிட்டு போனேன்னு சொன்னீங்க…. அதுவே தப்பாக புரிந்து கொண்டீர்கள்….. அந்த மாதிரி கொண்டு போயிட்டார்கள்…. அப்படின்னு ரேப் சீன் எல்லாம் இதுநாள் வரைக்கும் நான் அதை தானே  சொல்லிக் கொண்டிருக்கிறேன்…சினிமாவில் ரேப் என்றால் என்ன ? நிஜமாக ரேப் பண்ணுவதா ? நான் ஒரு நடிகையை  குறிப்பிட்டு எல்லாம் நான் சொல்வது  கிடையாது.

ஒரு கலைஞர் என்றால்,  ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு நடிகையை  வைத்துக் கொள்வார்கள்…  நாம் எல்லாம் அப்படி கொச்சைப்படுத்துவது அல்ல. அவர்களாக  கூட நடித்து இருந்தால் நல்லா இருக்கும்…. நான் திரிஷாவை தப்பா  பேசவில்லை… பாராட்டி பேசி இருக்கேன்…  அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்…. அவர்களை ரொம்ப பாராட்டி பேசி இருக்கேன்..

யாரையுமே குறைத்து பேசவில்லை….  என்கூட நடித்தவர்கள் எல்லாம் சொல்லி சொல்லி காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அவர்களை அந்த மாதிரி தப்பாக காண்பித்து உசுப்பேத்தி விட்டுள்ளார்கள்…  இந்த பொண்ணு பாருங்கள் பிருந்தா…  அந்த பொண்ணு டான்ஸ் மாஸ்டர்….  எல்லாத்தையும் இந்த சம்பவம் குறித்து பேச வைக்கிறார்கள் என தெரிவித்தார்.