சத்தீஸ்கர் மாநிலம் அனந்பூர் கிராமத்தில் 4 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் வீட்டின் பின்புறம் தீப்பெட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் கால்நடைக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோலுக்கு தீ வைத்துள்ளான். இதனால் தீ மளமளவென பரவியதில் சிறுவனும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதற்கிடையில் மகனை காப்பாற்ற தாய் எவ்வளவு முயன்றும் பயன் இல்லாமல் போனது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.