திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. எல்லையில் உள்ள 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தலில் 28 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி திரிபுராவில்  இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி வரை சுமார் 81% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக பரம எதிரிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள், ஆளும் பாஜகவை தோற்கடிக்க இந்தமுறை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது.