திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமானவர் தான் ஜீவா. இவர் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒருக் காலத்தில் பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக ஜீவா பொறுப்பேற்று உள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறியதாவது “நான் எப்படி ரஜினிகாந்த் ரசிகனோ, அதேபோன்று அடிப்படையில் எனக்கு காமராஜரை பிடிக்கும். தமிழக அரசியலை பொறுத்தவரையிலும் காமராஜர் ஆட்சிக்கு பிறகு இருந்தே வெற்றிடம் இருக்கிறது. இன்றும் நல்ல ஆட்சிக்கு உதாரணம் எனில் காமராஜர் ஆட்சி தான் என ஜீவா தெரிவித்துள்ளார்.