சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வாலிபர், தெருவில் பலூன் விற்கும் சிறுவனின் பலூன்களை வேண்டுமென்றே ஊசியால் குத்தி உடைப்பது போலவும், அந்த சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்பது போலவும் காட்சிகள் இருந்தன.
இதைப் பார்த்த பலரும், “அந்த பிஞ்சுப் பையன் உழைப்புல கை வைக்கிறீங்களே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என அந்த வாலிபரை கடுமையாக விமர்சித்தனர். இது இந்தியாவில் நடந்த சம்பவம் என்றும் தகவல்கள் பரவின.
ಬಳಲಿದ ಕೈಗಳನ್ನು ಕೈ ಹಿಡಿದು ಬಲಪಡಿಸಬೇಕೇ ಹೊರತು..
ನಮ್ಮ ಬಲವನ್ನು ಅಸಹಾಯಕರ ಮೇಲೆ ತೋರಿಸಬಾರದು..!#NewIndia pic.twitter.com/TA1zf0KfBz— DEEPU GOWDRU (@DEEPUVAJRAMUNI) January 25, 2026
ஆனால், பிரபல ஃபேக்ட் செக்கர் முகமது ஜுபைர் இந்த வீடியோவின் முழு தொகுப்பை வெளியிட்டு உண்மையை உடைத்துள்ளார். உண்மையில் இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது.
Not India. The video is from Bangladesh. In the video, The man asks the boy his age and then pays him for all the balloons and asks him to go to school/ go home and play instead of selling balloons. At the end of the video you see him give 1000 Taka. https://t.co/bumlTxnu0x pic.twitter.com/hTCRnMy2iE
— Mohammed Zubair (@zoo_bear) January 26, 2026
முழு வீடியோவில், அந்த வாலிபர் பலூனை உடைத்த பிறகு, அந்த சிறுவனிடம் அன்பாகப் பேசி, அவன் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்றும், இந்த சின்ன வயதில் வேலை செய்ய வேண்டாம் என்றும் அறிவுரை கூறுகிறார்.
அத்தோடு நின்றுவிடாமல், உடைக்கப்பட்ட பலூன்களுக்கான பணத்தை விட பல மடங்கு கூடுதலாக 1,000 வங்கதேச கரன்சி அந்த சிறுவனுக்கு கொடுத்து உதவி செய்கிறார்.
அரைகுறையாக எடிட் செய்யப்பட்ட வீடியோவை பார்த்துவிட்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு, இந்த முழு வீடியோ உண்மையை உணர்த்தியுள்ளது.
