செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில்  சனாதன வேறொறுப்பை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சனாதன பாசிசத்துக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டு வருகின்ற இயக்கம்,  போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி.

2018லே மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவள்ளுவரில்  சனாதன எதிர்ப்பு மாநில மாநாட்டில் நடத்தினோம். அதனை தொடர்ந்து சனாதன பாசிசத்தை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறோம். 2019ல் சனாதன பாசிசை எதிர்க்கும் மாநாடு ஒன்றை அனைத்து கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து திருச்சிராப்பள்ளியில் நடத்தி இருக்கிறோம்.

விடுதலை சிறுத்தலை கட்சி பற்ற வைத்த நெருப்பில் என்று இந்தியா முழுவதும் பற்றி படர்ந்து எரிகிறது. சனாதனம் எவ்வளவு கொடூரமானது, பயங்கரமான  கருத்தியல் என்பதை இன்றைக்கு ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு விரைவான ஒரு உரையாடல் நடைபெற்று வருவது ஆறுதல் அளிக்கிறது.

சனாதன பாசிச சக்திகளை இன்றைக்கு சனாதனத்திற்கான புதிய விளக்கத்தை தர முயற்சிக்கிறார்கள். அது சகோதரத்துவ கருத்து என்பதை போலவும்,, சமத்துவ கருத்து என்பதை போலவும் திரிபு வாதத்தை பரப்புகிறார்கள். உண்மையான பொருள் என்ன என்பதை அனைத்து தரப்பு சக்திகளும் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.