மத்திய பிரதேசத்தில் மனிதநேயமே வெட்கித் தலைகுனியும் வகையில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 6 வயது மதிக்கத்தக்க பச்சிளம் சிறுவன் ஒருவன், தனது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்யப்பட்டபோது, அந்தச் சிறுவன் உயிருக்கு பயந்து அலறியுள்ளான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், அந்த மிருகத்தனமான நபர் சிறுவனைத் தவிக்கத் தவிக்கக் கொலை செய்துள்ளான்.

விளையாட்டுப் பருவத்தில் இருந்த ஒரு பிஞ்சு உயிர், வக்கிர புத்தி கொண்ட ஒருவனால் இப்படித் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசார், அவர் மீது கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காம வெறிக்கு ஒரு குழந்தை பலியான இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ளது.