உத்தரப்பிரதேச மாநிலம் ஹப்பூரில் டியூஷன் வகுப்பிற்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை, சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் தனது தோழிகளுடன் அந்தச் சிறுமி நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த ஒரு சிறுவன் (Juvenile) திடீரெனச் சிறுமியின் கையைப் பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குத் தரதரவென இழுக்க முயன்றான்.
यूपी – हापुड़ में 3 छात्राएं रास्ते से निकल रही थीं, एक मनचले लड़के ने छात्रा को खींचने का प्रयास किया। शोर मचाने पर वो भाग निकला। @hindipatrakar pic.twitter.com/02ew8ZUOlk
— Sachin Gupta (@SachinGuptaUP) February 14, 2026
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சிறுமி, சற்றும் அஞ்சாமல் சத்தமிட்டு அவனிடமிருந்து போராடித் தப்பினாள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுப் பயந்துபோன அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த ஒட்டுமொத்தக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிப் பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஹப்பூர் போலீசார், சிசிடிவி ஆதாரங்களை வைத்து அந்தச் சிறுவனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
டியூஷன் மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
