பிலிப்பைன்ஸில் உள்ள செபு (Cebu) மன்டாவு (Mandaue City) நகரில், ஒரு கட்டிடத்தில் ஏற்பட்டப் பெரும் தீ விபத்தில் சிக்கியப் பெண் ஒருவர், தனது உயிரைப் பணயம் வைத்து வளர்ப்பு நாய்க்குட்டிகள் இரண்டையும் காப்பாற்றியச் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பயங்கரத் தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை சூழ்ந்த நிலையில், மாடியின் பால்கனியில் சிக்கியிருந்த அந்தப் பெண், கீழே கூடியிருந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் வைத்த ஏணியின் மூலம் வெளியேறத் தயாரானார்.
View this post on Instagram
பாதுகாப்பிற்காக ஏணியில் இறங்கும் முன், அந்தப் பெண் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். அவர் தனது இரு நாய்க்குட்டிகளையும் பால்கனியிலிருந்து கீழே வீசி எறிந்தார்.
கீழே நின்றிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த நாய்க்குட்டிகளைச் சரியாகப் பிடித்துச் பாதுகாப்பாகக் காப்பாற்றினர். பின், தீ மற்றும் புகை சூழ்ந்த நிலையில், அந்தப் பெண் தீயணைப்பு வீரரின் உதவியுடன் ஏணியின் வழியாகக் கவனமாக இறங்கினார்.
தனதுச் செல்லப்பிராணிகளுக்காக உயிரைப் பணயம் வைத்த அந்தப் பெண்ணின் தைரியம், தன்னலமற்ற அன்பு ஆகியவற்றைப் பாராட்டி, இணையவாசிகள் இவரை ‘ஃபர்மாம் ஹீரோ’ என்றுப் புகழ்ந்து வருகின்றனர்.
