
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னிய சங்க பொதுக்குழு கூட்டம் இன்று விருதாச்சலத்தில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி, கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சுரேஷ் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது என்னுடைய வீட்டில் அதுவும் நான் உட்கார்ந்து இருக்கும் இடத்திலேயே ஓட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். அதை யார் எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதில் லண்டனில் இருந்து வந்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.