விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். எனவே பழனிச்சாமியின் அண்ணன் அவரது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். கோயம்புத்தூரில் வசித்து வந்த பழனிசாமி டியூஷன் எடுத்தும், வத்சலா தனியார் வங்கியிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி காந்தி புரத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் வெளியே வராமல் அறையிலேயே இருந்துள்ளனர். நேற்று மதியமும் வெளியே வராததால் சந்தேகப்பட்டு லாட்ஜூ ஊழியர்கள் அறையைத் தட்டி உள்ளனர். பலமுறை கூப்பிட்டும் யாரும் வெளியே வராததால் அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர் அங்கே பழனிச்சாமி- வத்சலா தம்பதியினர் வாயில் நுரை தள்ளியபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த அறையில் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தனது மகன் இறந்த சோகம் தாங்க முடியாமல் தாங்களும் அவனோடு செல்வதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.