டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாகவே ‘பனிப்போர்’ நிலவி வருகிறது. குறிப்பாக, ஒபாமாவின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சையை டிரம்ப் பலமுறை கிளப்பியுள்ளார்.
ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தாலும், டிரம்ப் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதில் தவறு ஏதும் இல்லை” என்ற தொனியில் அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒபாமா நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் டிரம்ப், தான் செய்த விமர்சனங்களுக்காக வருத்தப்படப் போவதில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
