தனது சமூக வலைதளப் பக்கத்தில் டெல்லி மெட்ரோ குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ரோரி போர்ட்டர், இங்கிருக்கும் வசதிகள் உலகத் தரத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

“லண்டன் அண்டர்கிரவுண்ட் (Underground) ரயில்களை விட டெல்லி மெட்ரோ மிகவும் நவீனமாகவும், சுத்தமாகவும் இருக்கிறது. இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையம் போலவே இருக்கின்றன” என அவர் பாராட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rory Porter (@roryporter.1)

அரை மணி நேரப் பயணத்திற்கு வெறும் 43 ரூபாய் (0.35 பவுண்டுகள்) மட்டுமே கட்டணம் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. “உலகிலேயே நான் இவ்வளவு குறைவான கட்டணத்தில் மெட்ரோவில் பயணம் செய்தது இதுவே முதல் முறை” என நெகிழ்ந்துள்ளார்.

ரயில்கள் மிகவும் சுத்தமாக இருப்பதோடு, நல்ல நறுமணம் வீசுவதாகவும், போதிய இருக்கை வசதிகளுடன் ஏசி (Air-conditioned) வசதி பிரமாதமாக இருப்பதாகவும் அவர் தனது வீடியோவில் சிலாகித்துப் பேசியுள்ளார்.