நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் வெள்ளை நிறத்தில் மூன்றரை அடி உயரத்தில் கேஸ் நிரப்பப்பட்டு முப்பது கிலோ எடையில் சீனாவின் சிலிண்டர் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான் பரப்பில் பலூன் பறக்க விட்ட சீனா உளவு பார்ப்பதாக கூறி அந்த பலூனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் கேஸ் சிலிண்டர் தமிழ்நாட்டில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் வெள்ளை நிறத்தில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. இதை பார்த்த மீனவர்கள் மிரண்டு போனர். அதாவது அந்த மர்ம பொருள் உருளை வடிவில் சிலிண்டர் போன்று இருந்ததுதான் மீனவர்கள் பயந்ததற்கான காரணமாகும். இதை அடுத்து மீனவர்கள் அந்த சிலிண்டர் அருகே சென்று பார்த்தனர். அப்போது வெள்ளை நிற உருளையின் சிவப்பு வண்ணத்தில் சீன எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தன. இதனால் சந்தேகமடைந்த மீனவர்கள் உடனடியாக சிலிண்டரை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கடலோர காவல் படையினர், க்யூ பிரிவு போலீசார், சுங்கத்துறையினர் சென்று சிலிண்டரை கைப்பற்றினர். மேலும் ஆய்வு செய்தனர். அப்போது 3அடி உயரம் கொண்ட அந்த கேஸ் சிலிண்டரில் 30 கிலோ எடையுடன் கேஸ் இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் கேஸ் இருப்பதும் தெரிய வந்தது. இருப்பினும் அந்த சிலிண்டர் எப்படி கரை ஒதுங்கியது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.