செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  தமிழகத்தை ஒருத்தவரை இன்றைய அரசியல் சூழல். தமிழகத்தினுடைய பிரச்சனை என்ன ? சென்னை போராட்டகளமாக மாறி இருக்குது. திமுகவுடைய பொய்கள்… தமிழகதினுடைய உரிமை விட்டு கொடுத்து இருக்காங்க. இது எல்லாம் முக்கியமான பிரச்சனை. பாராளுமன்ற தேர்தலுக்கு 7 மாத காலம் இருக்கு.

இன்னைக்கு தமிழகத்துல இருந்து நிறைய நண்பர்கள் தெலுங்கானாக்கு எலெக்ஷன் வேலை செய்றதுக்கு போறாங்க. இது தவிர இன்னைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு ஏதும் பிரச்சனையா தெரியவில்ல. தமிழக பாஜகவுக்கு மேலிட பொறுப்பாளர் நியமிக்கபடாத வரை இதற்கு முன்பு யாரு மேலிட பொறுப்பாளராக அண்ணன் சி.டி ரவி இருந்தாங்க. அவங்க தான் இப்போ பாத்துட்டு இருகாங்க.

சுதாகர் ரெட்டி இணை பொறுப்பாளராக இருக்காங்க. ஜென்ரலா ஒரு மாநிலத்துக்கு அகில இந்திய அளவுல பொதுச்செயலாளர்  தான் மேலிட பொறுப்பாளரா ? இருக்கனும்ன்னு அவசியம் இல்ல. அதுக்கு முன்னாடி செயலாளர் இருந்து இருகாங்க. இரண்டு பொறுப்பிலும்  இல்லாதவங்க இருந்து இருக்காங்க. கட்சியை பொறுத்தவரைக்கு ஒரு சிஸ்டம். அமைப்பு பொதுச்செயலாளர் இருக்காங்க.

சுதாகர் ரெட்டிஜி இருகாங்க. சி.டி ரவி-ஜி இன்னும் ஏன் வரலைனா..? அவரு  மத்திய பிரதேசத்துல இன்ச்சார்ஜ் போட்டு இருக்காங்க. மத்திய பிரதேசத்துல சில பாராளுமன்ற தொகுதிக்கு இன்ச்சார்ஜ் அவங்க. அதுனால அந்த வேலையில இருக்காங்க. மத்தபடி பொறுப்பாளர் இல்லை அப்படினு கிடையாது . பொறுப்பாளர் இருக்காங்க…  நாம நினைக்கிற மாதிரி இந்த பொறுப்புல இருக்குறவங்கதான்,  பொறுப்பாளரா இருக்க வேண்டும் என்கிற அவசியம் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை என தெரிவித்தார்.