நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடங்கப்பட்டுள்ள நீட் கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சியில் எய்ம்ஸ்-க்கு செங்கல்லை காண்பித்ததை போல நீட் தேர்வுக்கு முட்டையை காண்பித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கண்ணாடியுடன் புதிய கெட்டப்பில் வந்தார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி திமுக இளைஞரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில் விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்திற்கு தன்னுடைய கையெழுத்தையும் பதிவிட்டார். அதன் பிறகு பேசிய அவர், நீட் விலக்கு அளிக்க கோரி திமுக எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.