ஜப்பானைச் சேர்ந்த 26 வயது கோடீஸ்வர இளைஞர் ஒருவர், தன்னை முழுமையாக ஒரு நாயைப் போல மாற்றிக் கொள்ள ரூ.2.2 பில்லியன் செலவில் பல அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான செய்தி தீயாய் பரவி வருகிறது.
அந்த வைரல் பதிவின்படி, அந்த நபர் அறுவை சிகிச்சைகள் மூலம் தன் உடலமைப்பை மாற்றிக்கொண்டதுடன், நாயைப் போலவே நடப்பது, பழகுவது போன்ற சேட்டைகளையும் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திகைப்பூட்டும் தகவல்கள் எவற்றுக்கும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், பரவி வரும் இந்தச் செய்தியில் உண்மையில் எந்தவொரு முகம் மற்றும் உடல் மாற்ற அறுவை சிகிச்சைகளும் நடக்கவில்லை என்று பல செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த நபர் எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை மாறாக, ஜப்பானிய மதிப்பில் சுமார் 2 மில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.11 முதல் 12 லட்சம் வரை செலவிட்டு மிகத் துல்லியமான ஒரு நாய் உடற்கூறு உடைய பிரத்யேக உடையை மட்டுமே அணிந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மனிதராகவே தொடர்கிறார் என்பதும், வைரலாகும் அந்த வீடியோ வெறும் உடையின் தந்திரம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
इंसान से ‘Dog’ बनने के लिए ₹220 करोड़ खर्च?
जापान के 26 वर्षीय करोड़पति Jaso को लेकर सोशल मीडिया पर दावा वायरल है कि उन्होंने खुद को कुत्ते जैसा दिखाने और उसी तरह जीवन जीने के लिए कथित तौर पर ₹220 करोड़ खर्च किए। 😳😳😳 pic.twitter.com/lIYJWoPQSo— दिव्या कुमारी (@divyakumaari) August 8, 2026
தற்போது இணையத்தை கலக்கி வரும் இந்தச் சம்பவம் உண்மைதானா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்த எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மனிதர் ஒருவர் நாயைப் போல மாறுவதற்காக பில்லியன் கணக்கில் செலவு செய்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த உண்மைத் தன்மையை அறிய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
