செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர்,  இலங்கை தமிழர்கள் பிரச்சனனையில் என்னை கைது செஞ்சாங்க.  சித்தார்த் குரல் கொடுத்தாரா ?  இல்லைல… அப்பறம் என்ன ? அதுனால எனக்கு கோவமா ? சித்தார்த் எனக்கு நண்பர்தான். கர்நாடகாவில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவம் அப்படி கிடையாது. கர்நாடகாவில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவ  நேரத்துல உங்களுக்கு கருத்து தெரிவிக்க விருப்பம் இருக்கலாம் அல்லது அதற்கான சூழல் இருக்கலாம். அப்படித்தான் பாக்கணுமே தவிர,

சித்தார்த்தை யாரும்  தனிமைபடுதலை. எனக்கு கோவம் இருக்கு, இல்லாமல் இல்ல.  எனக்கு சித்தார்த் நிகழ்வுல நடந்தது வருத்தம் இருக்குது. இங்க வரக்கூடிய கன்னட திரை கலைஞர்கள் வரும் போதுலாம் எதிர்ப்பு தெரிவிக்கலாமானா…  தெரிவிக்கலாம் தான். ஆனால் அது பண்பாடா இருக்காதுன்றதால தான்,  நாம அமைதியா இருக்கோம் என தெரிவித்தார்.

சித்தார்த் விவகாரத்தில் தமிழ் சினிமா கலைஞர்கள் குரல் கொடுக்காதது குறித்த கேள்விக்கு  பதிலளித்த இயக்குனர் அமிர், எனக்கு எப்பவுமே தமிழ் சினிமா நடிகர் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது. நீங்க ஏன் என்னைய பாத்து கேள்வி கேக்குறீங்க. எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.  நாடாளுமன்ற தேர்தல்ல சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு அதிமுக போகும் அப்படின்னு எலெக்ஷன் முடிஞ்ச அப்பறம் தான் உறுதியா சொல்ல முடியும். யாரோ ஒரு நாலு பேரு போயி….. லெட்டர்பட்டோட எடுத்து லெட்டர்பட் கட்சி ஆதரவு கொடுக்குறாங்க என்பதற்க்காக அதை ஆதரவுன்னு நாம சொல்லிட முடியாது என தெரிவித்தார்.