நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சனைகள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர் கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருவதால் மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளது. இதற்கிடையில் மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைபிள் படைகளில் உள்ள காலி பணியிடங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியதாவது துணை ராணுவ படைகளில் வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 10,04,980 என்பதில் இருந்து 2025 ஜனவரி 1 நிலவரப்படி 10 லட்சத்து 67 ஆயிரத்து 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு ஜனவரி 1 நிலவரம் படி 1,09,868 காலி பணியிடங்கள் உள்ளது. இதில் 72 ஆயிரத்து 689 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.