இந்தியா சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 5 வருடங்களுக்குப் பிறகு இந்தியா, சீன குடிமக்களுக்கு விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் இன்று முதல் சுற்றுலா விசாக்களுக்காக சீன குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சீனாவில் இருக்கும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை இந்தியா அனுமதிக்கவில்லை. இதனால் இந்திய மாணவர்கள் 22 ஆயிரம் பேர் சீனாவிற்குள் செல்ல விருந்து நிலையில் சீனா அதற்கு தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியா சீன மக்களுக்கான சுற்றுலா விசா வழங்குவதை உடனடியாக நிறுத்தியது.
தற்போது இரு நாடுகளும் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே, டெம்சோக் இருக்கும் டெபாசாங் எல்லைப் பகுதிகளில் இருக்கும் தங்கள் படைகளை திரும்ப பெற ஏற்பாடு செய்தன. இந்த முடிவால் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த பதட்டம் தற்போது அமைதியான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து இரு நாடுகளும் டெல்லியில் இருந்து சீனாவிற்கும், சீனாவில் இருந்து டெல்லிக்கும் நேரடி விமானங்களை தொடங்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளன. மேலும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது கலந்து கொண்டு பேசினார் என்று கூறப்படுகிறது.
