ஜிம்பாப்வேயில் நடைபெற்ற U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் அணி உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியது.மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வீரர்களுக்கு ரசிகர்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர்.