இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DNPb00wye9e/?igsh=N3c1bmpkczJmejhr
அதாவது அந்த வீடியோவில் இரவு நேரத்தில் பரபரப்பான சாலையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் தனது கையில் செல்போனை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு வந்த வாலிபர் ஒருவர் பதுங்கி வந்து அவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதையடுத்து அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். இதற்கிடையில் இருசக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் இறங்கி வந்து அவரது பைகளில் இருந்த செல்போனை எடுத்துச் சென்றார். அதன் பின் அவர்கள் அங்கிருந்து தப்பிய ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
