வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கை காட்டும் நபரை நாட்டின் பிரதமராக வருவார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

திமுகவின் உடைய மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி அவர்கள் இளைஞர் அணி தலைவராக 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அணியின் பணிகள் பன்மடங்காக வேகம் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய தேதியில் மற்றும் ஒன்றியம் – நகரம் – பேரூர் மட்டுமின்றி வார்டு கிளை அளவில் அணியை வலுவாக தற்போது கட்டியமைத்து இருக்கிறார்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் 240 தொகுதியில் 280 பாசறை கூட்டம் நடத்தி இளைஞர் அணியை கொள்கை உணர்வாளராக மாற்றியிருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆயிரம் இளைஞர்களாவது இந்த பிரம்மாண்ட மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாம் கை காட்டுவோரை பிரதமராக இந்திய அளவில் இருப்பார் என்றும் தெரிவித்து இருக்கிறார்.  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாம் கை காட்டுவோரை பிரதமராக வேண்டும் என்றால்,  நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என் நேரு இருக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர்,  கூட்டணி,  தொகுதி பங்கிட்டை தலைமை பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார்.