கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரை பந்தி விளை பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வெங்கடேசுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அனீஷ்குமார் மதுபோதையில் வெங்கடேசனின் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார்.
இதனால் காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. அதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அனீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.