தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுக மீனவர்களுக்கு என்ன செஞ்சிருக்காங்கன்ணு சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. தேர்தல் வாக்குறுதி திமுக கொடுத்தது. ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம்ன்னு சொன்னாங்க…  ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் கட்டுனாங்களா?

இதான்  அந்த 2 லட்சம் வீடு… அண்ணே! பின்னாடி இன்னொரு மேட்டர் இருக்கு அப்புறம் வர, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 1/2 ஆண்டுகளிலே அவர்கள் கட்டி கொடுப்பதாக சொன்ன 2 லட்சம் வீடு… ஒரு வீடு கூட தமிழகத்திலே கட்டி கொடுக்க படவில்லை. அதனாலதான் இந்த செங்கல்… நாங்கள் வந்தவுடன் மீன்பிடி தடை காலத்துல ஒரு மீனவருக்கு 8000ரூபாய் கொடுப்போம்னு சொன்னாங்க  ஒன்னையும் காணோம்… அதையும் பாத்துக்கொண்டிருக்கின்றோம், அதுவும் வரவில்லை.

புதிய மீன் வள  கல்லூரிகள் கட்டுவோம், இது வரை ஒரு கல்லூரி கட்டப்படவில்லை.  .குளைச்சலிலே   மீன் பிடி படகு தொழிற்சாலை அமைக்கப்படும்,   ஒன்னையும் காணோம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை ரப்பரை வைத்து ரப்பர் உதிரி பாகங்களை செய்யறதுக்கு ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்போம், இல்லை.

பேச்சிப்பாறையில் உள்ள அரசு தோட்டக்கலை ஆராட்சி மையத்தை கல்லூரியாக தரம் உயர்த்துவோம், காணோம். கன்னியாகுமரி மாவட்டத்துல தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்போம்,  ,காணோம். இதையெல்லாம் நீங்கள் சொல்லிகிட்டே போலாம். ரப்பர் பூங்கா அமைப்போம், காணோம். கல்குள மீன் பிடி துறைமுகம் அமைப்போம், காணோம்.

நாகர்கோவில் தொழிற்பேட்டை  அமைப்போம், காணோம். ஆனால் திமுகவிடம்  அண்ணே… நீங்க  511 தேர்தல் வாக்குறுதி குடுத்து இருக்கிறீங்க. கன்னியாகுமரிக்கு ஒண்ணுமே நிறைவேத்தா வில்லை அப்படி நாம் திமுக அரசிடம் கேட்டால் ….   அவர்கள் எய்ம்ஸ் எங்கன்னு கேட்பாங்க? முதலமைச்சர் கேட்குற ஒரே ஒரு கேள்வி…  எய்ம்ஸ் எங்கன்னு கேட்பாங்க? என அண்ணாமலை தெரிவித்தார்.