தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள அரண்மனை‌ 4 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராசி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் அரண்மனை 4 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்ததற்கு நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிக்க அவர் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடிவரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்னதாக அவர் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதற்கு ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது