பாம்புகளின் தலையில் “நாகமணி” இருக்குமென்ற நம்பிக்கை பழங்காலம் முதல் நிலவி வருகிறது. இந்த நம்பிக்கையை உணர்த்தும் வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், இருட்டில் கிடக்கும் ஒரு நாகப்பாம்பு, அதன் அருகே மின்னும் ஒரு ரத்தினத்தை ஒளிரச் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.
https://www.instagram.com/reel/DJAuisOon5p/?igsh=YWFuNnU1YXNqbWxh
இவ்வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது நாகமணி தான் என நம்பி, அதிசயத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் பாம்பின் தலைக்கு அருகில் ஜொலிக்கும் ஒளி வெவ்வேறு கோணங்களில் தெரிவது, இது ஒரு சாதாரண விளக்காக அல்ல என நினைக்க வைக்கிறது.
புராணக் கதைகளின்படி, நாகமணி என்பது மிக அரிதான ரத்தினம் என்றும், சக்திவாய்ந்த சக்திகளை அளிக்கக் கூடியது என்றும் நம்பப்படுகிறது. சிலர் இதை அரசர்கள் கூட பாதுகாத்து வைத்ததாகவும், யுத்தங்களில் வெற்றி பெற நாகமணி காரணமெனவும் கூறுவர். அந்த நம்பிக்கையின் பின்னணியில் இந்த வீடியோ, மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தையும், விசாரிப்பையும் கிளப்பியுள்ளது.
இவ்வீடியோவை பகிர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பயனர் பிரதீப் குமார், “இது உண்மையா? அல்லது கிராபிக்ஸா?” என கேள்வி எழுப்புகிறார். பலரும், “இது நாகமணிதான்” என நம்புகின்றனர். மற்றொருபக்கம், சிலர் “இது ஏற்கனவே எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம்” என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உண்மை என்னவென்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், இந்த வீடியோ இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. ஆனால் இதனால், நாகமணியின் மர்மம் மீண்டும் ஒரு முறை டிஜிட்டல் உலகில் பரவ ஆரம்பித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
