சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 17 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ, ஒற்றுமையின் வலிமை பற்றி உணர்த்தும் ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.

அந்த வீடியோவில், காட்டின் ராஜாவான ஒரு சிங்கத்தை (Lion), ஆத்திரத்துடன் நெருங்கிய பெரிய எருமைக் கூட்டம் (Herd of Buffalos), திடீரென ஒன்றிணைந்துத் தாக்கி, சிங்கத்தைக் கீழே தள்ளி தோற்கடிக்கிறது. முதலில் சிங்கம் ஒரு எருமையைத் தாக்க முயன்றாலும், சில வினாடிகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

புல்வெளியில் நடந்த இந்தச் சண்டையில், ஆவேசத்துடன் சீறி வந்த எருமைகளின் கொம்புகளும், ஒன்றிணைந்த உடல்களின் தாக்குதலும் சிங்கத்தின் பலத்தை முறியடித்துவிட்டது.

ஒரு எருமையைத் தாக்க சிங்கம் முயன்றபோது, மற்ற எருமைகள் சிங்கத்தைக் கொம்பால் தூக்கி எறிந்துவிட்டன. இந்த வீடியோவில் உள்ள “தனிமையில் பலம் இல்லை; ஒற்றுமையே உண்மையான சக்தி” என்ற வாழ்க்கைப் பாடம் பலரையும் கவர்ந்துள்ளது.

“வேட்டையாடப்பட்டவனின் ஒற்றுமை, வேட்டையாடுபவனின் கதையை மாற்றுகிறது” என்றும், “ராஜா கூட முழங்காலிட வேண்டியிருக்கும்” என்றும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.