இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று பிப்ரவரி 17-ஆம் தேதி நிகழ்கிறது. சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும்போது ஏற்படும் இந்த வானியல் நிகழ்வு, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி இரவு 7:57 மணி வரை நீடிக்கும்.

சுமார் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் நிகழவுள்ள இந்த கிரகணத்தின் போது, சூரியன் ஒரு பிரகாசமான மோதிரம் போன்ற “நெருப்பு வளையமாக” காட்சியளிக்கும். இருப்பினும், இந்த அரிய நிகழ்வை இந்தியாவில் காண முடியாது என்பதால், கோவில்கள் அடைக்கப்படாது மற்றும் அன்றாட ஆன்மீக சடங்குகளுக்கு எந்தவிதத் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ இருக்காது.

இந்த வளைய சூரிய கிரகணம் அண்டார்டிகா பகுதியில் முழுமையாகத் தெரியும். மேலும், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, சிலி, ஜிம்பாப்வே மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளில் பகுதி அளவிலான கிரகணமாகத் தென்படும். இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால், தோஷ காலமான சூதக் காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

பொதுமக்கள் தங்கள் தினசரி செயல்பாடுகளையும், முன்னோர்களுக்கான வழிபாடுகளையும் வழக்கம்போல மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.