பேய் படங்களில் உயிரிழந்தவர்களின் உடல் திடீரென எழுந்து உட்கார்வது போன்ற காட்சிகளைப் பார்த்து நாம் நடுங்கியிருப்போம். ஆனால், நிஜ வாழ்விலும் மரணத்திற்குப் பிறகு உடல் சில அசைவுகளை வெளிப்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆவி அல்லது பேய் தொடர்பான விஷயம் அல்ல, முற்றிலும் உயிரியல் மாற்றங்களே என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூளைச் சாவு அடைந்த நோயாளிகளிடம் இந்த ‘லாசரஸ் அறிகுறி’ அரிதாகக் காணப்படுகிறது. இதில் நோயாளியின் கைகள் திடீரென உயர்ந்து, மார்பின் மீது குறுக்காக வந்து விழும். இது பார்ப்பதற்கு உயிருடன் எழுவது போலத் தோன்றினாலும், இது மூளையால் கட்டுப்படுத்தப்படும் அசைவு அல்ல. முதுகெலும்பில் உள்ள நரம்பு மண்டலத்தின் தன்னிச்சையான எதிர்வினையே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

இந்த அசைவுகளுக்கு காரணம் கிளினிக்கல் மரணம்  நிகழ்ந்த சில நிமிடங்களுக்கு நரம்பு செல்கள் செயல்படும். அப்போது தசை செல்களில் எஞ்சியிருக்கும் மின் சமிக்ஞைகளால் கை, கால்களில் சிறு நடுக்கம் அல்லது துடிப்பு ஏற்படலாம். மரணத்திற்கு 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு உடல் விறைக்கத் தொடங்கும். இதற்கு உடலில் ‘ஏடிபி’ (ATP) எனப்படும் ஆற்றல் இல்லாததே காரணம். சில நாட்களுக்குப் பிறகு இந்த விறைப்புத் தன்மை குறையும்போது, தசைகள் தளர்வதால் உடல் பாகங்கள் லேசாக நகரலாம்.

உடல் சிதைவடையும் போது உருவாகும் வாயுக்களின் அழுத்தம் காரணமாக கைகால்கள் நகர வாய்ப்புள்ளது. மேலும், தோல்கள் காய்ந்து சுருங்கும்போது உடல் பாகங்களை அவை இழுக்கக்கூடும். ஆஸ்திரேலியாவின் ‘டாபோனோமிக்’ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆலிசன் வில்சன் தலைமையிலான குழு, 17 மாதங்கள் தொடர்ச்சியாக ஒரு சடலத்தைக் கண்காணித்து ஆய்வு செய்தது. இதற்காக ‘டைம்-லேப்ஸ்’ கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை, சடலத்தின் கைகள் கணிசமான தூரத்திற்கு அசைந்தன. உடலை ஒட்டி வைக்கப்பட்டிருந்த கைகள், சில மாதங்களில் தானாகவே விலகிச் சென்றன. தசை நார்கள்  காய்ந்து சுருங்குவதே இந்த நீண்ட கால அசைவுகளுக்கு முக்கிய காரணம் என ஆலிசன் வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கண்டுபிடிப்பு குற்றவியல் விசாரணைகளிலும் (Forensic Science), தடயவியல் துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ashekur Rahman (@jogfoleng)