தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, தமிழகத்தில் சாராயத்தை மூடு, மூடு என்று திமுக எதிர்க்கட்சியா இருக்கும் போது சொன்னாங்க. ஏப்ரல் மாதம் நாம வெளியிடக்கூடிய பட்டியல்ல, அண்ணன் டி.ஆர் பாலு அவர்களுக்கு எத்தனை சாராய ஆலை தமிழ்நாட்டில் இருக்கு ? அதனுடைய சொத்து மதிப்பு என்ன ? மாசம் டி.ஆர் பாலு அண்ணன் கம்பெனியில் இருந்து எவ்வளவு டாஸ்மாக் பாட்டில் ஆப்டேக் ஆகுது ? ஆச்சரியமாக இருக்கு…
கேஸ் மட்டும் கணக்கு பண்ணி பாருங்க. இன்னைக்கு 62 லட்சம் கேஸ் விக்கிறாங்க. கிட்டத்தட்ட 35 லட்சம் கேஸ் திமுகவினருக்கு சொந்தமான சாராய ஆலையிலிருந்து, 60 சதவீதம் டாஸ்மாக் பொருள் அங்கிருந்து வருது. எப்படி அவுங்களால மூட முடியும் ? 62 லட்சம் கேஸ்ல, 60% கேஸ் திமுக காரர் உடைய சாராய ஆலையை கொடுக்கும் பொழுது, எப்படி இவர்களால் டாஸ்மார்க்கை மூடுவார்கள்? 32 ஆயிரம் கோடியில் இருந்த டாஸ்மாக் இன்றைக்கு 38 ஆயிரம் கோடி. 44 ஆயிரம் கோடிக்கு இன்னும் ஒன்றை வருஷத்துல ஓடிரும்.
பாராளுமன்ற தேர்தல் முடியும்தே, நீங்கள் நம்ப மாட்டீங்க… 50,000 கோடி ரூபாய் டாஸ்மார்க் மூலம் வருமானம் வரும். எப்படி ஒரு ஏழை மகள், அந்த கணவன் சம்பாதிக்க கூடிய பணத்தை குழந்தையின் கல்விக்காக அந்த ஏழைத்தாய் எப்படி பயன்படுத்த முடியும். சம்பாதிக்கிறது எல்லாத்தையுமே டாஸ்மாக் வச்சு வச்சு அரசை உறிஞ்சுகிட்டு இருந்தா ? ஏழை ஏழையாகத்தான் இருப்பான். இதுதான் திராவிட மாடல். ஏழை ஏழையாக இருக்கணும்.
நடுத்தர மக்கள், நடுத்தரத்திற்கு கீழே இருக்கணும். நாம் அண்டிப் பிழைக்க வேண்டும். அப்படி பிழைக்கும் பொழுது, நாம் ஓட்டுக்காக பணம் கொடுத்தோ… இலவசம் கொடுத்தோ… வாக்கை அள்ளிவிடலாம் என திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. 2024ல் 2 லட்சம் கோடி ரூபாய் திமுக சொத்து பட்டியலை பாஜக வெளியிட்டும். அவர்கள் இல்லை என்று சொல்லட்டும். அவர்கள் பேங்க் அக்கவுண்ட் கொடுக்கட்டும். ஓபன் பண்ணி காட்டட்டும் என தெரிவித்தார்.