துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், ஒரு ஆண்டு விழாவை நடத்தி முடிவதற்கே  கஷ்டப்படுகின்றோம். துக்ளக்ல  எல்லாம் 60 , 70  வயசு. யங்ஸ்டர் வயது 62. அதனால் எங்க கஷ்டம் உங்களுக்கு தெரியாது. துக்ளக்  ஆண்டு விழா நடத்துவது என்பது ஒரு தடவை நடத்தினோம்…. 50 ஆவது பொன்விழா நடத்தினோம். பெரிய சக்சஸ்…  வரவேண்டும் வர வேண்டும் என்று சொல்லி, எங்க போனாலும் கூட்டம்.

எங்களால் தான் முடியவில்லை. அதனால் துக்ளக்-க்கு இருக்கின்ற வரவேற்ப்பை  வைத்துக் கொண்டு,  அங்கங்க ஆண்டு விழா நடத்த வேண்டும் என்றால்  அதற்கு தனி அமைப்பு தேவை.  இந்த எலக்சன் எல்லாம் முடியட்டும் … எல்லா கட்சிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள்…  கட்சி எல்லாம் பற்றி எழுதுகின்ற துக்ளக்   மாட்டும் மாறுபட்டிருக்க முடியாது.  நல்ல ஐடியா தான்… ஆனால்  கஷ்டமாக இருக்கிறது.

இந்த கூட்டணி அமைப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும்.  1989இல் ரொம்ப தீவிரமாக இருந்தவன் நானு. கூட்டணி என எப்போ அனோன்ஸ் பண்ணினார்களோ… அப்பொழுது ஆபத்து வந்துவிட்டது என்று அர்த்தம்…  நாங்கள் எல்லாம் 1989 இல் என்ன முடிவு பண்ணினோம்… பின்னாடி சொல்லலாம்ன்னு இருக்கிறேன்…  கூட்டணி என்ற பெயரையே உபயோகப்படுத்தாதீங்க…

அந்தந்த ஸ்டேட்டில் என்னென்ன அட்ஜஸ்ட் பண்ண முடியுமோ,  பண்ணுங்கள் என்று சொல்லி தான் 1989இல் ராஜிவ் காந்தியை தோற்கடிக்க முடிந்தது. கூட்டணி என்று சொன்னவுடனே,  யார் தலைவர் ? யார் செயலாளர் ? யார் மினிஸ்டர் ? யார் பிரைம் மினிஸ்டர் ? இதில் போய் மாட்டி கொண்டார்கள். அதனால் இந்தி கூட்டணி என்பது வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் நிறைய குழப்பங்களை உருவாக்க முடியும் அவர்களால்…  ஆனால் இன்றைக்கு பாஜக இருக்கின்ற நிலைமையில் இந்த குழப்பங்கள் எல்லாம் அவர்களால் எதிர்கொள்ள முடியும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை என தெரிவித்தார்.