உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் திருட்டு விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் SAR ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திருட்டுப்போனதாக அந்த நிறுவனத்தின் பைலட் ரவீந்திர் சிங், போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அரசின் சட்டம் ஒழுங்கு முறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அகிலேஷ், “பாஜக ஆட்சியில் திருட்டு, கொலை, பலாத்காரம் போன்ற குற்றவாளிகள் பார்ட் பார்ட்டாக செயல்படுகிறார்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, குறிப்பிட்ட சமூகங்களை பாஜக அரசு இலக்காகக் கொண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் என்கவுண்டர் செய்கின்றது என்றும், இந்த சம்பவம் அதற்குப் பெரிய எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த உ.பி போலீசார், ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் இருந்தவாறே வேறு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி, திருட்டு சம்பவம் இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும், இந்த விவகாரம் உத்தரப் பிரதேச அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.