நாடு முழுவதும் தற்போது வெங்காய விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஐந்தாம் தேதி மத்திய அரசு மானிய விலையில் வெங்காயத்தை 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் எதிரொலியாக தான் தற்போது வெங்காய விலை சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு மும்பையில் ஒரு கிலோ வெங்காயம் 56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் 58 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த தகவலை மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.