வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்கள், மனிதனின் சிறந்த நண்பராகவே கருதப்படுகிறது. இதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாகவே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வீட்டின் செல்லப்பிராணியான நாய் மற்றும் அவரது உரிமையாளருக்கு இடையில் உள்ள பாச போராட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விசுவாசமான நாய் அதன் நோய்வாய்ப்பட்ட உரிமையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து ஓடியுள்ளது.

சிறிது நேரம் ஆம்புலன்ஸ் பின்னால் விடாமல் துரத்தி அந்த நாய் ஓடியது. இறுதியில் ஒரு இரக்கம் உள்ள ஆம்புலன்ஸ் பணியாளர் வெளிய வந்து, தனது உரிமையாளரை சந்திக்க நாயை அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ நெடிசன்களின் இதயங்களை உருக்கியது.