விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொலிட்டிக்கல் பார்ட்டி,  எலக்சன்னில் தேர்தலில் நின்னா…  4 பேரை MLA ஆக்கினால் ?  அவுங்க பதவி, பவுசு, புகழ்,  பெருமிதம். அதுதானா இலக்கு என்று  இல்லை. அந்த தனிநபர்கள் வெற்றி பெற்றால் ? அந்த தனி நபர்களுக்கான புகழ், அந்த தனி நபர்களுக்கான பெருமை,  அந்த தனி நபர்களுக்கான செல்வாக்கு, என்பதற்காகவா தேர்தல்,  கிடையாது..

நம்முடைய கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பிறகு அது  10 இடங்களில் வெற்றி பெறுகிறது. பிறகு அது 40 இடங்களில் வெற்றி பெறுகிறது என்று அந்த வெற்றி பெறும் எண்ணிக்கையை பெருக்குவது,  அதன் மூலம் ஆட்சி – அதிகாரத்தை கைப்பற்றுவது.  இதுதான் ஒரு அரசியல் கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்,  இருக்க முடியும். இல்லன்னா…  ஒரு அரசியல் கட்சி தேவை இல்லை.

அரசியல் கட்சி ஏன் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் ? ஏன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் ? ஏற்கனவே கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. ஏற்கனவே சில கட்சிகள் களத்தில் போட்டியிடுகிறார்களே..  அப்படி இருக்கிறபோது அவர்களோடு சேர்ந்து நாமும் அந்த கட்சியை ஆட்சியில் அமர வைத்திருக்கலாமே,  நம்மில் சிலரும் சட்டமன்ற  உறுப்பினராகலாமே என்ற கேள்வி வேற. நாம் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினோம்.  அந்த அரசியல் கட்சிக்கு என்ன கொள்கை ? அந்த அரசியல் கட்சி எதற்காக இங்கே தோன்றி இருக்கின்றது ? இந்த அரசியல் கட்சியில் நாம் ஏன் இருக்கிறோம் ? இந்த புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை என பேசினார்.