இயற்கை எழில் கொஞ்சும் மேகலாயா மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குச் சுற்றுலா வந்த இந்தியக் குடும்பம் ஒன்று, தாங்கள் பயன்படுத்திய காலி பிளாஸ்டிக் பாட்டில்களைச் சாலையோரத்திலேயே வீசிவிட்டுச் செல்ல முயன்றனர்.
இதைப் பார்த்த வெளிநாட்டவர் ஒருவர் (Paduhaki என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்துபவர், உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தினார். கோபப்படாமல் அதே சமயம் மிகவும் நிதானமாக அவர்களின் செயலைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த பாட்டில்களைத் திரும்ப எடுக்குமாறு கூறினார்.
View this post on Instagram
முதலில், “இங்கு குப்பைத் தொட்டிகள் (Dustbin) ஏதும் இல்லை, அதனால் தான் வீசினோம்” என்று அந்த குடும்பத்தினர் சாக்குப்போக்கு கூறினர்.
ஆனால், அந்த வெளிநாட்டவர் விடாப்பிடியாக நின்றதால், வேறு வழியின்றி அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கீழே கிடந்த பாட்டில்களை மீண்டும் எடுத்துச் சென்றார்.
“சொந்த நாட்டு மக்கள் செய்யாத காரியத்தை ஒரு வெளிநாட்டவர் செய்துள்ளாரே” என நெட்டிசன்கள் அந்த மனிதரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். “உண்மையிலேயே இந்த மண்ணிற்குப் புறம்பானவர் (Outsider) யார்?” என்ற கேள்வியுடன் இந்த வீடியோ இந்தியாவின் தூய்மை குறித்துப் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
