மகாராஷ்டிரா மாநிலம் புணே மாவட்டத்தில் உள்ள வாத்தர் ஹிமா என்ற கிராமத்தில், லால்யா என்ற கோழி, தாய் இல்லாமல் தவித்த 10-12 கோழிக் குஞ்சுகளுக்குதாயாக மாறியுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஊர் விவசாயி அர்ஜுன் கட்டப்பே என்பவரின் வீட்டு கோழி முட்டையிட்டு குட்டிகளை உருவாக்கியதும், அதே நேரத்தில் ஒரு தெரு நாய் தாக்கி, அந்த தாய் கோழியை கொன்றுவிட்டது. தாயை இழந்த குட்டிகள் தவித்த நிலையில், மற்ற கோழிகள் அவற்றை ஏற்க மறுத்தன. ஆனால், வீட்டில் இருந்த லால்யா என்ற சிவப்பு கோழி, திடீரென அந்த குட்டிகளை அணைத்துக்கொண்டு, தாயின் பொறுப்பை ஏற்றது.

தாய் கோழி போலவே தன்னுடைய சுவாச வெப்பத்தில் குட்டிகளை வைத்துக் கொடுக்கும் லால்யா, முக்கால் உணவையும் அவற்றுக்கு பகிர்ந்தளித்து, ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கின்றது. “80 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன், இது போன்ற அன்பும் பரிவு கொண்ட கோழியை பார்த்ததே இல்ல” என்கிறார் அந்த விவசாயியின் குடும்பத்தினர்.

“இந்த கோழியை எப்போதும் வீட்டிலேயே வைத்துக் கொண்டு, இறுதி வரை பார்த்துக் கொள்வோம்” என்று அவர்கள் உறுதியாக கூறினர். மனிதர்களுக்கே பாடமாக இருக்கும் இந்த நடத்தை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.