ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ஹேரா கிராமத்தைச் (Piphera, Dholpur, Rajasthan) சேர்ந்த சோனு என்பவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், முதல் இரவு அன்றே புதிதாக வந்த மருமகள் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து வைப்பதற்காகத் தரகரிடம் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கி சோனுவுக்குத் திருமணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த புதுப்பெண் , இரவில் கணவர் சோனு மற்றும் அவரதுச் குடும்ப உறுப்பினர்களுக்குப் போதை மருந்து கலந்த உணவைக் கொடுத்துள்ளார்.

அனைவரும் மயங்கிய நிலையில் இருந்தபோது, வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிக் கொண்டு அவர் தப்பி ஓடினார்.

காலையில் கண் விழித்த குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் போலீஸில் புகார் கொடுத்தனர். மயக்கமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தப்பி ஓடியப் பெண்ணைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.