இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் உள்ள சஹ்வா கிராமத்தில் (Shahwa, Chamba) நடைபெற்ற ஒரு திருமண விழாவில், கூரையின் மீது நின்று சுமார் 100 விருந்தினர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென கச்சா கூரை இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.

கூரை இடிந்து விழுந்ததில் அதன் மீது இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 20 பேர் பெண்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கிய மக்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டுச் சிவில் மருத்துவமனை தீசாவில் (Tisa Civil Hospital) அனுமதித்துள்ளனர். கூரை பலவீனமாக இருந்ததா அல்லது அதிகப் பாரம் தாங்காமல் விழுந்ததா எனப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.