தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இடையிலான நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய வேலுமணி, விஜய் தனக்கு மிகச்சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் படம் ஒன்று ரிலீஸ் ஆகாமல் சிக்கலில் இருந்தபோது, அவர் தனது வீட்டில் தங்கியிருந்ததாகவும், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அழைத்துச் சென்று பேசி, படம் ரிலீஸ் ஆகத் தேவையான உதவிகளைச் செய்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
